தமிழக அரசைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
திருச்சி, ஜூன் 26 கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து புதிய தமிழகம் கட்சி திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் பிச்சைமுத்து தலைமையில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம். அருகில் வடக்கு மாவட்ட செயலாளர் தினகரன், திருவரங்கம் தொகுதி செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாணவரணி பாலா, ஒன்றிய செயலாளர்கள் அருண்குமார், அரசகுமார் உள்பட பலர் உள்ளனர்.