வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகைகள் திருட்டு

0 230
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 26 திருச்சி மேல சிந்தாமணி ராமமூர்த்தி நகர் ஸ்டார் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி கீதா ( வயது 38). பள்ளி ஆசிரியை இவர் வேலை விஷயமாக மணப்பாறைக்கு சென்று விட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பின்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்ததில் நெக்லஸ், , மோதிரம், செயின், கம்மல் உள்பட 8 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து கீதா கோட்டை பிரிவு போலீசில் புகார் செய்தார். இது குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் வழக்கு பதிந்து இது தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.