கட்டி முடிக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரி பா.ஜ.க.வினர் மனு

0 214
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 2  திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியம் அரசங்குடி ஊராட்சியில் புதிதாக கட்டபட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி முடிக்கப்பட்டு 6 மாதம் காலமாகி விட்டது இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராததால் கர்ப்பிணி பெண்களுக்கும் மருத்துவம் பார்க்க முடியாமல் அவதி படுகிறார்கள்

விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு  மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் சந்தித்து பாரதிய ஜனதா கட்சி திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய பாஜக சார்பாக திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய தலைவர் T.செந்தில் குமார் தலைமையில் மனுகொடுக்கபட்டது

இந்த நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக  முன்னாள் பட்டியல் அணி மாநில செயலாளரும் அரசங்குடி சக்தி கேந்திர பொறுப்பாளர் சி. இந்திரன், மாவட்ட உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு துணை தலைவர் வேங்கூர் கார்த்திகேயன் பிரபாகரன் மூனிஸ் வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.