மலேசியாவில் உயிரிழந்த வாலிபர் உடல் 17 நாட்களுக்கு பின் சொந்த ஊருக்கு வந்தது

0 13
Stalin trichy visit

திருச்சி, நவ. 27  மலேசியாவில் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த வாலிபர் உடல் 17 நாட்களுக்கு பின் சொந்த ஊருக்கு வந்தது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த காரைகுளத்தை சேர்ந்த துரைமுருகன் (36) என்பவர் மலேசியாவில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த 9 ம் தேதி வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான நிலையில் அவரின் நிலை தெரியாமல் போனது. பின்னர் துரை முருகன் குடும்பத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரிடம் துரைமுருகனை மீட்டு தரும்படி கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து மணப்பாறை எம்.எல்.ஏ கதிரவன் இது தொடர்பான முயற்சிகள் மேற்கொண்டு துரை முருகன் உயிரிழந்ததை உறுதி செய்த பின் உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டார். அதன்படி தன்னுடைய சொந்த செலவில் துரைமுருகன் மனைவி உள்ளிட்ட 3 பேரை மலேசியா அனுப்பி வைத்து அங்கு அவர்கள் துரைமுருகன் இறப்பை உறுதி செய்து ஊர் திரும்பினர்.

இதையடுத்து துரை முருகன் உடல் அதிகாலை விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அவரின் உடலை குடுபத்தினரிடம் ஒப்படைந்த பின் எம்எம்ஏ இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் உடல் சொந்த ஊரான காரைக்குளத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குடும்பத்தினர், உறவினர்கள், கிராம மக்கள் அஞ்சலி செலுத்திய பின் இன்று தகனம் செய்யப்பட்டது.

மலேசியாவில் இறந்த வாலிபரின் உடலை மீட்டு சொந்த ஊர் கொண்டு வர மணப்பாறை எம்.எல்.ஏ கதிரவன் மேற்கொண்ட முயற்சி மற்றும் உதவி மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.