திருச்சியிலிருந்து கூடுதல் விமானங்களை இயக்க தமிழக எம்.பிக்கள் வலியுறுத்தல்

0 255
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 2 திருச்சி பன்னாட்டு விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணிகளை முடித்து, கூடுதல் விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை, எம்.பி. க்கள் துரை வைகோ (திருச்சி), அருண்நேரு (பெரம்பலூர்) ஜோதிமணி(கரூர்), முரசொலி(தஞ்சை) மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் எம். எம். அப்துல்லா ஆகியோர் மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை தில்லியில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளோம்.
அந்த மனுவில், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அதிக எண்ணிக்கையிலான விமானங்களை இயக்கஏதுவாக, விமான ஓடுதள விரிவாக்கப் பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்க வேண்டியுள்ளது. அதற்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மேலும், திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு கூடுதல் விமானங்களை இயக்க இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அனுமதி வழங்க வேண்டும். இதன்மூலம் பொதுமக்கள் பயனடைவதோடு, திருச்சி விமான நிலையத்திற்கு வருவாயும் அதிகரிக்கும். மேலும் திருச்சியிலிருந்து தில்லி, கொச்சி நகரங்களுக்கு நேரடியாக விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், திருச்சி மாவட்ட மக்கள் மட்டுமின்றி அருகாமை மாவட்ட மக்களும் பயன்பெறுவர் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.