மூன்று சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் பேரணி

0 295
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 8  மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி மாநிலம் தழுவிய பேரணி மற்றும் பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்று வருகிறது இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு உள்ளனர்

கடந்த ஒன்றாம் தேதி முதல் மூன்று சட்டங்கள் திருத்தம் செய்யப்பட்டு அமலுக்கு வந்துள்ளது அன்றைய நாள் முதலே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது

அதே போல திருச்சியில் 1 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் போராட்டம் நடைபெற்றது 2 ஆம் தேதி நீதி மன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
3 ஆம் தேதி மத்திய அரசு அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் என பல்வேறு போராட்டங்கள் திருச்சியில் நடைபெற்றது .

இந்த நிலையில் இன்று திருச்சியில் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு மற்றும் ஜாக் இணைந்து நடத்தும் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது

இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு உள்ளனர் .

திருச்சி நீதிமன்ற வளாகம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை முதல் உழவர் சந்தை மைதானம் வரை பேரணியாக சென்று உழவர் சந்தை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

வழக்கறிஞர்களின் இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துறை வைகோ கலந்து கொண்டு தனது ஆதரவினை தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.