மணப்பாறை அருகே மிக பழைமையான சிவன் கோவிலில் 12501 அகல் விளக்குகளால் உருவாக்கப்பட்ட லிங்கம்
திருச்சி, நவ.25 மணப்பாறை அருகே மிக பழைமையான சிவன் கோவிலில் 12501 அகல் விளக்குகளால் உருவாக்கப்பட்ட லிங்கம்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பளுவஞ்சியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழைமையான மேற்கு நோக்கிய சிவாலயம் என்று அழைக்கப்படும் அகிலாண்டேஷ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை தினத்தில் தீபம் ஏற்றி வழிபாடு நடைபெறும். இதே போல் இந்த ஆண்டும் கார்த்திகை தீப வழிபாடு கோலிகலமாக நடைபெற்ற நிலையில் கோவிலில் 12501 அகல் விளக்குகளால் சிவலிங்க உருவம் அமைக்கப்பட்டு இருந்தது. இது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அமைதிருந்தது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.