முசிறியில் இரட்டை கொலை செய்தவர் போலீஸில் சரண்

0 243
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 9  முசிறியில் இரட்டைக் கொலை செய்தவர் போலீஸில் சரண்

முசிறி அந்தரப்பட்டி குடோன் அருகில் வசித்து வருபவர் முருகேசன் மனைவி கீதா (46 ) இவர் தன் கணவனைப் பிரிந்து. இரண்டு மகன்கள் உடன் வசித்து வருகிறார். இந்நிலையில் முசிறி அருகே வாளவந்தியைச் சேர்ந்த சேர்ந்த பாலச்சந்திரன் (64) என்பவருடன் கள்ள தொடர்பு வைத்து இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் புதிய கேஸ் வாங்க பணம் கேட்டு வந்துள்ளார். இதனால் நேற்று காலை சுமார் 6. 30 மணி அளவில் பாலச்சந்திரன் கீதா வீட்டிற்கு சென்ற போது மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கீதாவை அரிவாளால் கழுத்தில் வெட்டி கொலை செய்துள்ளார்.

இதோடு மட்டுமல்லாமல் வாள வந்தியில் தனது வீட்டு அருகில் உள்ள ரமேஷ் என்பவருடன் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த அவரை தேடிச் சென்றுள்ளார். அவர் ஜெம்புநாதபுரத்தில் இருப்பதை அறிந்து அங்கு சென்று தலையில் வெட்டி உள்ளார். இதனை அறிந்து அருகில் இருந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் இறந்து விட்டார்.

இதையடுத்து பாலச்சந்திரன் ஜெம்முநாதபுரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

Leave A Reply

Your email address will not be published.