சூரியூரில் புதிதாக சிப்காட் அமையவுள்ள இடத்தில் அமைச்சர்கள் ஆய்வு
திருச்சி, ஜூலை 9 திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட சூரியூர் பகுதியில் புதிய சிப்காட் தொழிற்சாலை அமைப்பதற்கு அடையாளம் காணப்பட்டுள்ள இடத்தை தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். விரைவாக அங்கு சிப்காட் அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் உடனடியாக துவங்கப்படும் என அமைச்சர் டி ஆர் பி ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்