திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞரின் வாழ்க்கை வரலாறு தொகுப்பு வெளியீடு

0 196
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 9  முத்தமிழ் அறிஞர் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு தொகுப்புகளை தயாரித்து வெளியிடுதல், டிவிட்டர், முகநூல்( facebook), youtube, ரீல்ஸ், தொடங்குதல், 100 இளைஞர்களுக்கு வலைதள வசதியுடன் கூடிய கைப்பேசி வழங்கும் நிகழ்வு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் கருணாநிதி தலைமையில் இன்று நடந்தது .

மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் குட்டிமணி, தமிழரசன் ஆகியோர் வரவேற்றனர். விழாவில் , அமைச்சர் தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கழக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் திண்டுக்கல் லியோனி,  திருச்சி மாநகர திமுக செயலாளர் மதிவாணன், திமுக தகவல் தொழில்நுட்ப அணி திருச்சி மண்டல பொறுப்பாளர் கேசவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகி வன்னை அரங்கநாதன் துணை மேயர் திவ்யா பகுதி கழகச் செயலாளர் விஜயகுமார் மற்றும் மாவட்ட, மாநகர, பகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் மகாதேவன், முரளி கிருஷ்ணன், உமாராணி ஆகியோர் நன்றி கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.