சிலிண்டர் வெடித்ததில் 10 கடைகள் எரிந்து சேதம்
திருச்சி, ஜூலை 11 திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள சின்ன ஏரி கரையில் இரவு நேர டிபன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்றிரவு ஒரு டிபன் கடையில் இருந்து இருந்த சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் தீ அருகில் உள்ள கடைகளுக்குள் பரவியது இதனால் தீ மளமளவென பற்றி எரிந்தது. சிலிண்டர்கள் வெடித்து சத்தம் கேட்டு பலரும் ஓடி வந்தனர்.
சின்ன ஏரி கரையில் இருந்த இரண்டு டிரான்ஸ்பார்மர்கள் இடையே இருந்த 10 க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்ததால் உடனடியாக துறையூர் நகரம் முழுவதும் மின் நிறுத்தம் செய்து பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விபத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துறையூர் தீயணைப்பு துறையினர் நீரை பாய்ச்சி அடித்தனர் இருப்பினும் காற்றின் வேகத்தால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் வாகனத்தில் இருந்த தண்ணீர் தீர்ந்து தீயணைப்பு வாகனம் தண்ணீர் நிரப்பி வந்து இரவு 11.20 வரை தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். தீ விபத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து வருவாய் துறை, தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விபரம் சேகரித்து வருகின்றனர்.