இந்தி திணிப்பை அனுமதிக்க மாட்டோம் : அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு
திருச்சி, ஜூலை 11 கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கூட்டம் மலைக்கோட்டை பகுதி 13, 13ஏ வட்ட தி.மு.க. சார்பில் வடக்கு ஆண்டாள்வீதியில் நேற்று மாலை நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி. கழக செய்தி தொடர்பாளர், இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், கலைஞருடைய நூற்றாண்டை முன்னிட்டு 100 நிகழ்ச்சிகள் அதில் 36வது தெருமுனை கூட்டமாக 100 நிகழ்ச்சியை கடந்து சென்று விட்டோம் என்று சொன்னாலும் அதில் 36 ஆவது தெருமுனை கூட்டமாக நிறைவு தெருமுனை கூட்டமாக நான் கலந்து கொள்கின்ற முதல் தெருமுனை கூட்டமாக இந்த கூட்டம் அமைந்திருக்கின்றது அது இங்கு வருகை தந்திருக்கும் தமிழன் பிரசன்னாவும் ஒரு காரணம். இன்றைக்கு நாங்க எல்லாம் மேடை போட்டு பேசுகின்றோம் சட்டமன்றத்திலே பேசுகிறோம் என்று சொன்னால் எங்களுக்கெல்லாம் முன்னோடியாக நாங்கள் ஒரு சிலரை பார்த்து இதுபோல் நாமும் பேச வேண்டும் என்று எண்ணுகின்ற நபர்களில் ஒரு நபராக இருக்கக் கூடியவர் நம்முடைய அன்பு சகோதரர் தமிழன் பிரசன்னா என்று சொன்னால் அது மிகையாகாது ஆக அப்படிப்பட்ட பிரசன்னா இங்கே வருகை தந்து இன்றைக்கு உரையாற்றி இருக்கின்றார். அதேபோன்றுதான் நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் பேரிலேயே இனிமையை வைத்துக் கொண்டிருக்கின்ற இனிப்பு இனிகோ இருதயராஜ் இப்படி நல்லவர்களால் மேடையில் இருக்கும் போது மழை வராமல் வேறு என்னதான் வரும் ஆக அப்படிப்பட்ட நம்முடைய வருகை தந்திருக்கின்ற மாநகரக் கழகத்தினுடைய செயலாளர் அண்ணன் மதிவாணனுக்கும் என்னுடைய பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டு இருக்கின்றேன். கலைஞர் அவர்கள் இன்றும் நம்மை வழி நடத்துகிறார் என்பதற்காக தான் 2016 ஆம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கை என்று வந்த பொழுது இந்த புதிய கல்விக் கொள்கையை நான் ஏன் எதிர்க்க வேண்டும் என்று அவர் போட்ட அந்த விதைதான் இன்றைக்கு நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் நம்முடைய மாநிலத்திற்கு என்று தனியாக ஒரு கல்விக் கொள்கையை தனிநபர் ஒரு நபர் ஆணையத்தின் மூலமாக இன்னைக்கு அந்த ஆவணத்தையும் இன்னைக்கு ஒரு பெற்றிருக்கின்றார் அது மட்டுமல்ல நுழைவுத் தேர்வு என்பதை இருக்கக்கூடாது என்பதை ஒழித்துக் கட்டியவர். கலைஞர் 2006 ஆம் ஆண்டு அவர் கொண்டு வந்த நுழைவுத்தேர்வு தடை சட்டத்தின் காரணத்தால்தான் நம்முடைய பிள்ளைகள் எல்லாம் 12 ஆம் வகுப்பு நம்முடைய பிள்ளைகள் எல்லாம் மருத்துவ படிப்பாக இருந்தாலும், பொறியியல் கல்லூரி சேர்வதாக தான் அதுக்கு போதுமானது என்று சொன்னவர் கலைஞர். அதனால் தான் இன்றைக்கு நுழைவுத் தேர்வு நீட்டின மாதிரி தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்தாலும் நமது சட்டமாக இருந்தாலும் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டமாக இருந்தாலும் இந்திய சாட்சிகள் சட்டமாக இருந்தாலும் சரி இதெல்லாம் மாத்துறாங்க யாரு ஒன்றியத்துல இன்னைக்கு கூட்டணி ஆட்சி நடத்திட்டு இருக்காங்களே அவங்க மாத்துறாங்க என்னமோ பேர்லாம் வைக்கிறாங்க பாரதியார் நியாய சங்கீதாவா பாரதிய நாகரிக சுரக்ஷனா சங்கீதாவா பாரதிய சாட்சிகள் சட்டம் என்று இப்படி சாட்சிய சட்டம் அப்படின்னு நமக்கெல்லாம் புரியாத பேர் முதல்ல இதுவே தப்பு அரசியல் அமைப்பு சட்டத்தின் மூலமாக ஒரு பெயரை தப்புன்னு மொத மொதல்ல இந்தியாவிலேயே கொடுத்தது நமது முதலமைச்சர்.க்ஷநம்ம மொழியே மறந்து போயிடும் இன்றைக்கு கங்கணம் கட்டிக்கொண்டு ஒன்றியத்தில் ஒரு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற விதத்தில் எதை எதிர்நீத கண்மூடித்தனமான எதிர்கால மொழி திணிப்பு என்று வரும்போது அன்றைக்கும் இன்றைக்கு முத்தமிழ் கலைஞர் தான் நம்ம வழிநடத்திக் கொண்டிருக்கின்றார். மொழி திணிப்பை என்றைக்கும் எதிர்ப்போம் அது இந்தியாக இருந்தாலும் சரி எந்த மொழியாக இருந்தாலும் சரி ஆக அதை செய்து கொண்டிருக்கின்றோம் என்று சொன்னால் இன்றைக்கு நாம் குரல் கொடுக்கின்றோம் நம்முடைய தமிழ்நாட்டு முதலமைச்சர் அதற்கென்று ஒரு தனி நபர் ஆணையத்தை இயக்கியவர் ஏற்படுத்தி இருக்கிறார் என்று சொன்னால் இன்றைக்கும் நம்மை வழி நடத்திக் கொண்டிருப்பவர் கலைஞர் தான் அதற்காகத்தான் அவருக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும் என்று தெற்கு மாவட்டத்தின் சார்பாக 100 நிகழ்ச்சிகளை கடந்து அவருக்கு 101 வது பிறந்தநாளை வந்துவிட்டது. ஆனால் நிறைவு கூட்டத்தை நாங்கள் நடத்திக் கொண்டிருக்கும் என்று சொன்னால் இடையில் வந்த தேர்தலை முன்கூட்டி இதெல்லாம் தள்ளி வைத்திருந்தது காரணமாக ஆக அந்த விதத்தில் வருகை தந்திருக்கின்ற தாய்மார்கள் உங்களுக்கெல்லாம் இந்த நேரத்தை இந்த கூட்டத்தை பயன்படுத்திக்கொண்டு ஒட்டுமொத்த இந்தியாவிலேயே புதுச்சேரியும் சேர்த்து 40க்கு 40 ஒரு மாநிலம் வென்று இருக்கிறது ஒரு தலைவர் வென்று காட்டி இருக்கிறார் என்று சொன்னார் அந்த வெற்றியை தந்த என்னுடைய தாய்மார்கள் உங்கள் அனைவருக்கும் இந்த இடத்தில் இருந்து எங்களுடைய நன்றிகளை தெரிவிக் நாங்கள் கடமைப்பட்டிருக்கின்றோம். சட்டமன்ற உறுப்பினர் இனிகோ சொன்னது போல் வருகின்ற 2026 தேர்தல்ல நம்முடைய தலைவர் சொல்லியிருக்கிறார் 234 தொகுதியில 200 தொகுதி குறைந்தபட்ச வெல்ல வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் ஏன் அதிலும் நூற்றுக்கு நூறு 234 தொகுதிகளிலும் வென்று காட்டுவோம். உங்களோடு நாங்கள் இருக்கின்றோம் எங்களோடு நீங்கள் இருக்கிறீர்கள் யார் வந்தாலும் ஒரு கை பார்ப்போம் நீங்கள் இருக்கின்றபோது எங்களுக்கு என்ன கவலை என்று கூறினார். முன்னதாக பகுதி செயலாளர் மோகன் வரவேற்புரை ஆற்றினார். வட்டச் செயலாளர் சங்கர், சரவண செல்வன் தலைமை தாங்கினார். மாநகரகழக செயலாளரும் மண்டல தலைவருமான மு.மதிவாணன், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் உள்ளிட்ட ஏராளமான நிருவாகிகள் கலந்து கொண்டனர்.நிறைவாக மாமன்ற உறுப்பினர் மணிமேகலை நன்றி கூறினார்.