ஆபத்தான மின்கம்பத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

0 443
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 11 திருச்சி காட்டூர் 38 வது வார்டு பாரி நகர் ,அம்மு நகர், அண்ணா நகர் செல்லும் பிரதான சாலையில் பல வருடங்களாக இரண்டு மின் கம்பங்கள் சிதலமடைந்து எந்நேரமும் விழுந்து விடும் நிலையில் உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடமும் காட்டூர் பகுதி மின்சார வாரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற பின்பும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவதாகவும், மேலும் பல ஆண்டுகளாக பாதாள சாக்கடை பணியை காரணம் காட்டி சாலைகளை சீர் செய்யாமல் இருப்பதாகவும் இதன் காரணமாக விரைவில் அப்பகுதி மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.