திருச்சி விமான நிலையத்தில் ரூ.78 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி, ஜூலை 12 திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று காலை சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் வந்திறங்கியது விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறையினர், வான்நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் தனது உள்ளாடையில் ரூ.51 லட்சத்து 19 ஆயிரத்து 774 மதிப்புள்ள 682 கிராம் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்து எடுத்து வந்தார். அதே விமானத்தில் பயணம் செய்த மற்றொரு பயணி ரூ.27 லட்சத்து 2 ஆயிரத்து 520 மதிப்புள்ள 360 கிராம் தங்க சங்கிலியை எடுத்து வந்துள்ளார். இருவரையும் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் கடத்தி வந்த 1 கிலோ 42 கிராம் தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ. 78 லட்சத்து 22 ஆயிரத்து 294 ஆகும்