கலைஞர் நூலகம் அமையவுள்ள இடத்தை தேர்வு செய்ய அமைச்சர் அன்பில் மகேஸ் கள ஆய்வு

0 3,444
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 12  கலைஞர் பெயரால் திருச்சியில் அமையவிருக்கும் புதிய நூலகத்திற்கு இடம் தேர்வு  செய்ய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கள ஆய்வு  செய்தார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஜூன் 27 அன்று முதலமைச்சரால் விதி எண்.110ன்கீழ் காவேரிக்கரையில் அமைந்த மாநகரமான திருச்சிராப்பள்ளி மாநகரில் உலகத் தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும்” என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாநகரில் உலகத் தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க இடம் தேர்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி , திருச்சிராப்பள்ளி  கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ். இனிக்கோஇருதயராஜ், பொது நூலக இயக்குநர் க.இளம்பகவத்  மற்றும் மண்டலம் மூன்றின் தலைவர் மு மதிவாணன்  ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது  பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நூலகத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.