டிப்பர் லாரி எரிந்து நாசம் : ஓட்டுநருக்கு தீக்காயம்

0 172
Stalin trichy visit

திருச்சியில் டிப்பர் லாரி எரிந்து நாசம். தீக்காயம் அடைந்த டிரைவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி.

திருச்சி எடமலைப்பட்டி புத்தூர் பகுதியில் குப்பை கழிவுகளை தரம் பிரிக்கும் கிடங்கு மாநகராட்சி பசுமை பூங்கா நுண் உர செயலாக்க மையத்தில் செயல்பட்டு வருகிறது. மேலும் எடமலைப்பட்டிபுதூர் இராமசந்திரா நகர், கிராப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து பெறப்படும் குப்பை கழிவுகளை தரம் பிரிப்பதற்காக டிப்பர் லாரி மூலம் கொண்டு வந்த போது அருகில் இருந்த மின்சார கம்பியில் குப்பை ஏற்றி வந்த டிப்பர் லாரியின் மீது உரசியதில் திடீரென தீப்பிடித்து பற்றி எரிந்தது உடனே அங்கிருந்த ஊழியர்கள் இது குறித்து திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். மேலும் டிப்பர் லாரி தீப்பிடித்து எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் டிப்பர் லாரியில் டிரைவர் தீக்காயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.