பட்டா வழங்குவதுடன் – வீடு கட்டித்தரும் திட்டத்தை முதலமைச்சர் செய்துள்ளார்: அமைச்சர் கே.என்.நேரு
பட்டா வழங்குவது மட்டுமல்ல வீடு கட்டி தருவதற்கான ஏற்பாட்டையும் முதலமைச்சர் செய்து தந்துள்ளார் – திருச்சியில் நடைபெற்ற நல திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு..
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
ரூ.248.61 கோடி மதிப்பிலான முடிவடைந்த 524 பணிகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அதனையடுத்து ரூ.99.26 கோடியில் 6176 பயனாளிகள் நல திட்ட உதவிகளையும் வழங்கினர்கள்..
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு..
மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்குவது மட்டுமல்ல வீடு கட்டும் திட்டத்தையும் முதலமைச்சர் வழங்கி உள்ளார்கள். முதலமைச்சர் வீடு கட்டும் திட்டத்தில் திருச்சி மாவட்டத்திற்கு 4000 வீடுகள் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதில் 2000 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வீடு கட்டும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு 60,000 தருகிறது தமிழக அரசு தான் ரூ.2.65 லட்சத்தை தமிழக அரசு தான் வழங்குகிறது. மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்யும் என்றார்.
பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில்,
ஒவ்வொரு நாளும் புதிய திட்டங்களை தீட்டி அது சரியான முறையில் செயல்படுகிறதா என தொடர்ந்து முதலமைச்சர் கண்காணித்து வருகிறார். அவை சரியான முறையில் சென்று சேர்வதன் காரணமாக தான் மக்கள் தொடர்ந்து தி.மு.க விற்கு வெற்றியை தந்து கொண்டிருக்கிறார்கள்.
மாநகராட்சியில் இணைக்கப்பட்டுள்ள திருவெறும்பூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும் என நகராட்சி நிர்வாக துறை அமைச்சரிடம் கேட்டு கொள்கிறேன்.
எங்களை தேர்ந்தெடுத்த மக்களாகிய எஜமானர்களுக்கு தொடர்ந்து உழைப்போம் என்றார்
இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணன், மாநகர மேயர் அன்பழகன், திருச்சி எம்.பி துரை வைகோ, கரூர் எம்.பி ஜோதிமணி, மாநகர காவல்துறை ஆணையர் காமினி, சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், பழனியாண்டி, ஸ்டாலின் குமார், சௌந்தர பாண்டியன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.