திருச்சி வேலுச்சாமி-யை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

0 198
Stalin trichy visit

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது இதன் காரணமாக காங்கிரஸ் கட்சினர் மற்றும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் நேற்று திருச்சி வேலுச்சாமி பேசிய பேச்சு அண்ணாமலையும் , பாஜகவினரையும் அறுவருக்கதகையில் உள்ளதாக கூறி காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் திருச்சி வேலுச்சாமி யை கண்டித்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரே பாஜகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

அப்போது செல்வப் பெருந்தகை மற்றும் திருச்சி வேலுச்சாமி ஆகியோரை கண்டித்து கோசங்களை
எழுப்பினர் .  மேலும் அவர்களில் புகைப்படங்களை கிழித்தும், செருப்பால் அடித்தும், அவர்களின் படங்களை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர் புகைப்படத்தை எரிக்கும் போது போலீசார் தடுத்து நிறுத்தினர் இதனால் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது

Leave A Reply

Your email address will not be published.