ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம்
திருச்சி, ஜூலை 22 திருச்சி மாவட்டம், முசிறி ஒன்றியம், வடக்கு சித்தாம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம் ஆல் தி சில்ரன் அறக்கட்டளையின் சார்பில் நேற்று நடைபெற்றது.
இம்முகாமில் டாக்டர். திலீப் குமார் மருத்துவ அலுவலர் தலைமை ஏற்று பொது மக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினார். மேலும் இம்முகாமில் மருத்துவ அலுவலர் டாக்டர்.ஷோபனா, டாக்டர்.திவ்யா மற்றும் கிராம செவிலியர்கள் அனைவரும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இரத்த அழுத்த பரிசோதனை, சக்கரை நோய் பரிசோதனை, கண் பரிசோதனை, மற்றும் பொதுநல மருத்துவத்திற்கு பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை வழங்கினார்கள்.
ஆல் தி சில்ரன் அறக்கட்டளையின் மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கி.முருகையா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.