மின்சாரம் தாக்கிய டெய்லர் உயிரிழப்பு

0 258
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 26  திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலை குடமுருட்டி செக்போஸ்ட் அருகில் RR ஸ்போர்ட்ஸ் என்ற விளையாட்டு வீரர்களுக்குக்கான சீருடை  தைக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில நாட்களாக பலத்த காற்றால் நிறுவனத்தின் பெயர் பலகை கழண்டு தொங்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று  மாலை RR ஸ்போர்ட்ஸ் ஊழியர்கள் சிலர் பெயர் பலகையை கழட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த கட்டத்தின் அருகே சென்ற உயர் மின் அழுத்த வயரில் இரும்பு பெயர் பலகை உரசியதில் தாராநல்லூரைச் சேர்ந்த அசோக் (டெய்லர்) என்பவர் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மேலும் அருகில் இருந்த கோபி (ஊழியர் ) என்பவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த கோபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.