மணப்பாறை அருகே அரசு பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நூலகம் தொடக்கம்

0 199
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 26  மணப்பாறை அருகே தன்னார்வலர்களின் உதவியால் தனித்துவம் பெறும் அரசு பள்ளியில்  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நூலகம் தொடக்கம்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சமுத்திரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தன்னார்வலர்கள் மற்றும் சில தனியார் நிறுவனங்களின் சார்பில் பள்ளியின் வளர்ச்சிக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி தற்போது மாணவ – மாணவிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பொருட்டு தனியார் நிறுவனம் சார்பில் மணிக்கு 250 லிட்டர் திறன் கொண்ட ஆர்.ஓ சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதே போல் முன்னாள்‌ மாணவர் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அறிவுசார் அரங்கம் (நூலகம்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளிக்கு ஒரே நேரத்தில் முன்னாள்‌ மாணவர் மற்றும் தனியார் நிறுவனத்தின் உதவியால் மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் நூலகம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் தொடங்கப்பட்டது மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.