அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சி முன்னேற்பாடு
திருச்சி, ஜூலை 31 திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள பச்சைமலையில் நாளை (ஆகஸ்ட் 1) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ளும் அரசு விழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின்குமார், தியாகராஜன், மாவட்ட வன அலுவலர் கிருத்திகா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், மாவட்ட ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.