அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயண விவரம்

0 329
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 31 தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜூலை 31) மதியம் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பங்கேற்க உள்ள நிகழ்ச்சிகள்: இன்று மாலை 3. 00 மணியளவில் நம்பர் 1 டோல்கேட் அருகில் புகழினி பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைத்து பின்பு மாலை 03.15 மணியளவில் திருவெறும்பூர் ஒன்றியம், காட்டூர் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அங்கூரன் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளார். மாலை 3.45 மணியளவில் திருவெறும்பூர் வட்டம் சூரியூர் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் ஒலிம்பியாட் விளையாட்டு அரங்கிற்கு இடம் தேர்வு செய்ய அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு மாலை 5.00 மணியளவில் திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூரில் பணிகள் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
மாலை 5.15 மணியளவில் திருச்சி கலையரங்கில் நடைபெற உள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கி உரையாற்றுகிறார் என்று சுற்றுப்பயணம் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.