தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளன : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

0 354
Stalin trichy visit

திருச்சி, ஆக. 2  திமுகவின் அரசு திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளதாக அமைச்சர் உதயநிதி கூறினார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அமைச்சர்கள் உதயநிதி, நேரு மகேஸ் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை குறித்து ஆலோசனை கொடுக்கப்பட்டது விரைவில் திட்டங்களை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டது

பின்னர் அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களிடம் பேசிய போது  ஒவ்வொரு மாவட்ட வாரியாக கள ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள் அரசின் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. அரசின் நலத்திட்டங்கள் முடிவுற்றவை முடிவுறக் கூடிய திட்டங்களை துரிதப்படுத்துவது குறித்து ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கை முதல்வர அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும். திருச்சியில் முக்கியமான குறிப்பிட்ட திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளன. மேலும் பணிகள் பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.