அந்தாகன் படம் குறித்து நடிகர் பிரசாந்த் திருச்சியில் பேட்டி

0 414
Stalin trichy visit

நடிகர் பிரசாந்த், நடிகை பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்துள்ள ‘அந்தாகன்’ திரைப்படம் வருகிற 9 ந்தேதி வெளியாகிறது.
இதுகுறித்து திருச்சியில் நேற்று பிரசாந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நானும் நடிகை பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்த ‘அந்தாகன்’ படத்தில் நான் கண் தெரியாதவராக நடித்துள்ளேன். இது சவால்கள் நிறைந்தது என்பதை இந்த படத்தில் நடிக்கும் போது தெரிந்து கொண்டேன். சிறந்த கதை மற்றும் திரைக் கதையுள்ள படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறும். இந்த படத்தில் காதல், சண்டை, திரில்லர், பாடல் என அனைத்தும் உள்ளது. சிம்ரன், ஊர்வசி,
கார்த்திக், வனிதா, மோகன் வைத்தியா போன்றவர்களின் நடிப்பு உங்களை
பெரிதும் கவரும். படம் வெளியாவதற்கு முன்பு திருட்டுத்தனமாக படத்தை இணையதளத்தில் வெளியிடுவதால் சினிமா தொழில் நசிந்து போய் விடும். சினிமாவை பார்த்து ரசிகர்கள் ரீல்ஸ் செய்வது ஆபத்தானது, நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவர்கள் விருப்பம். மக்களுக்கு நல்லது செய்பவர்களை ஆதரிப்பேன். தனது கதைக்கு ஏற்ற நடிகர்களை இயக்குனர் சங்கர் தேர்வு செய்வார். தமிழகம் முழுவதும் அந் தாகன் பட புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறேன்.இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது அவசியம் ஹெல்மெட் அணிந்துநிதானமாக செல்ல வேண்டும் என்று கூறினார்.பேட்டியின் போது நடிகர் பிரசன்ட் மணி,பிரபு, எஸ் ஆர் எம். சீனிவாசன், சில்வியா மனோகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.