திருச்சியில் “வீ தி லீடர்ஸ்” அமைப்பின் உறுப்பினர் சேர்க்கை – ஆலோசனைக் கூட்டம்

0 13
Stalin trichy visit

திருச்சி, செப். 7  பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள “வீ தி லீடர்ஸ்” அமைப்பின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆலோசனை கூட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகர் மலைக்கோட்டை பகுதியில் “வீ தி லீடர்ஸ்” அமைப்பின் ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளர் ஜெயலட்சுமி சதீஷ்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக பேராசிரியர் கல்பனா தர்மேந்திரா, ஶ்ரீகாந்த் கார்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பெண்களின் பாதுகாப்பு குறித்தும், அமைப்பின் வளர்ச்சி குறித்தும் சிறப்புரையாற்றினர்.

மேலும் இக்கூட்டத்தில் காசி மகேஷ்வரன், சிவக்குமார், As.கார்த்திகேயன், வேங்கூர் கார்த்திகேயன் உள்பட வீ தி லீடர்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியாக ஒருங்கிணைப்பாளர் ஜெயலட்சுமி சதீஷ்குமார் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.