வாசவி கிளப் இன்டர்நேஷனல் சார்பில் இன்டர்நேஷனல் ஸ்போர்ட்ஸ் மீட்

0 454
Stalin trichy visit

திருச்சி, ஆகஸ்ட் 10, ஆரிய வைஸ்ய சமூகத்தினரால் நடத்தப்படும் வாசவி கிளப் உலகின் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலத்தில் அதிக அளவு உள்ளது. இச்சங்கத்தின் முக்கிய நோக்கம் அனைத்து இன, மொழி மக்களுக்கும் தன்நலன் பாராமல் சமூக  பணி செய்து வருகிறது.

மேலும் வாசவி சங்கமானது, வைஸ்ய சமூகத்தைச் சார்ந்த அனைத்து வயதினரையும் இறகுபந்தாட்டம் (பேட்மிட்டன்), சதுரங்கம் (செஸ்) போன்ற விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடுத்தி, பன்னாட்டளவில் 33 மாவட்டங்களில் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தி முடித்து, இறுதி கட்டமாக பன்னாட்டளவில் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கான இண்டர்நேஷனல் ஸ்போர்ட்ஸ் மீட் திருச்சி, ஜங்ஷன், வாசவி மஹாலில் இன்று காலை 10 மணி அளவில் தொடங்கிய நிகழ்வானது நாளை (11-8-2024) மாலை வரை நடைபெறுகிறது.

 

இவ்விழாவிற்கு பன்னாட்டுத் தலைவர் வாசவியன் திரு. R. ரவிச்சந்திரன் அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பன்னாட்டு வாசவி சங்கங்களின் துணைத்தலைவர் வாசவியன் திரு. இருகுல ராமகிருஷ்ணா, முன்னாள் தலைவர் வாசவியன் சௌபாக்யா V. ஆதிகேசவன் மற்றும் TAVNIN கமிட்டி தலைவர் மாதவ மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

இவ்விழா பன்னாட்டு வாசவி சங்கங்களில் ஒரு பகுதியான மாவட்டம் V 503 A மாவட் ஆளுநர் வாசவியன் திரு. S.ஆதிசேஷன் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்.

விழாவில் முன்னாள் மாவட்ட ஆளுநர்கள், மாவட்ட நிர்வாகிகள் உட்பட சங்க உறுப்பினர்கள் அதிக அளவில் பங்கேற்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.