திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம்

0 175
Stalin trichy visit

திருச்சி, ஆக.17 தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில், மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

தி.மு.க. தலைவராக நமது முதலமைச்சர் பொறுப்பேற்ற நடைபெற்ற 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், அண்மையில் நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் உள்ளிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி வாகை சூடிய, தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவிப்பதுடன், கழகத்தின் வெற்றிக்கு பாடுபட்ட அனைத்து நிருவாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் ஆகியோர் நன்றி தெரிவிக்கப்பட்டது.

தந்தை பெரியாரின் கொள்கைகளை ஜனநாயக வழியில் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் நிறைவேற்றிடும் நோக்கத்துடன் பேரறிஞர் அண்ணா வால் 1949ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் , 75 ஆண்டுகளாக மக்களுக்குப் பணியாற்றி, இந்த 2024-ஆம் ஆண்டு தனது பவள விழா நிறைவினைக் கொண்டாடுகிறது. முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒவ்வொரு உடன்பிறப்பும் உள்ளன்புடன் கொண்டாடி மகிழ்ந்த நிலையில், பேரறிஞர் அண்ணா வழியில் தலைவர் கலைஞர் கட்டிக்காத்த இயக்கமாம் தி.மு.க.வின் பவளவிழா ஆண்டு நிறைவினை, கழகம் தொடங்கப்பட்ட நாளான செப்டம்பர் 17 அன்று கொண்டாடி மகிழ இருப்பதால், இந்த முக்கால் நூற்றாண்டு கால அரசியல் வரலாற்றில் தி.மு.கழகம் படைத்த சாதனைகள் – கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மகத்தான திட்டங்கள் – திராவிட மாடல் அரசைத் திறம்பட நடத்திவரும்தமிழ்நாடு முதலமைச்சரின் மக்கள்நலத் திட்டங்கள் ஆகியவற்றை விளக்கிச் சுவர் விளம்பரங்கள் எழுதப்படுவதுடன், தமிழ்நாடு முழுவதும் தெருமுனைக் கூட்டங்களை நடத்தி, மக்களிடம் தி.மு.க.வின் சாதனைகளை எடுத்துக் கூறும் நிகழ்வுகளுடன், கழகக் கொடிக் கம்பங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு, அதில் அந்தந்தப் பகுதியில் கழகத்திற்காக உழைத்த மூத்த முன்னோடிகளால்தி.மு.க இருவண்ணக் கொடியை ஏற்றிப் பட்டொளி வீசிப் பறந்திடச் செய்திடவும், ஒவ்வொரு ஊரிலும் உள்ள நம் கொள்கைத் தலைவர்களான தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது சிலைகளைப் பொலிவுபடுத்தி, மாலையிட்டு மரியாதை செலுத்துவது. தி.மு.க பவள விழா ஆண்டில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் எழுச்சி மிகுந்த விழாவாகக் கொண்டாடப்படுவது.
முத்தமிழறிஞர் கலைஞரின் புகழினைப் போற்றுகிற வகையில் இந்திய ஒன்றிய அரசு ரூ.100 மதிப்பிலான கலைஞர் உருவம் பொறித்த நாணயம் வெளியிட முன்வந்தமைக்கு நன்றியினைத் தெரிவிப்பதுடன், ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு என்று எந்தச் சிறப்பு திட்டத்தையும் வழங்காமல், முறையான நிதி ஒதுக்கீடு செய்யாமல், ரயில்வே துறையின் திட்டங்களில்கூட பாராமுகமாக நடந்துக் கொள்வதையும் பாரபட்சம் காட்டுவதையும் வழக்கமாக வைத்து, தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
திருச்சி தெற்கு மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 101 நிகழ்ச்சிகளை நடத்தியதுடன் மூன்று தொகுதிகளிலும் கலைஞர் சிலைகளை நிறுவி மாவட்டம் முழுவதும் சுமார் 206 இடங்களில் கொடிக்கம்பங்களை புதிதாக அமைத்து கல்வெட்டுகள் அமைக்கப்பட்டதற்கும் நாடாளுமன்ற தேர்தலில் திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, மணப்பாறை ஆகிய மூன்று தொகுதிகளிலும் அதிக பெரும்பான்மை வாக்குகளை பெற்றமைக்கு மாவட்ட செயலாளர், அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாநகரசெயலாளர் மதிவாணன் மாவட்டக் கழக நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேகரன், சபியுல்லா, செந்தில் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர் .

Leave A Reply

Your email address will not be published.