திருச்சி மாவட்டத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் பட்டியல் வெளியீடு
திருச்சி, ஆக.21 திருச்சி மாவட்டத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் பட்டியல் வெளியீடு
தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி அமைந்ததும், முதல் அமைச்சர் விஜய் தமிழகத் தில் பல்வேறு மாவட்டங் களில் வழிபாட்டுத்தலங்கள், பள்ளி, கல்லூரிகள், பஸ் நிலையங்கள் அருகே செயல் பட்டு வரும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவித்தார். அதன்படி ஓவ் மாவட்டத்திலும் டாஸ்மாக் கடைகள் மூடப் பட்டன.
அந்தவகையில் திருச்சியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் பட்டியல் வெளி யிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- திருச்சி சிந்தா மணி வெனிஸ்தெரு, ஸ்ரீரங்கம் தாலுகா தோகைமலை மெயின்ரோடு அல்லித்துறை, திருச்சி அண்ணாசிலை சிந் தாமணி பஜார், கண்டோன் மெண்ட் வில்லியம்ஸ்ரோடு ஜவான்ஸ்பவன், மத்திய பஸ் நிலையம் வ.உ.சி.ரோடு, கண்டோன்மெண்ட் மெக்டொனால்ட்ஸ்ரோடு, திருச்சி பாபுரோடு ஆகிய பகுதிகளில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
மேலும் கண்டோன் மெண்ட் வில்லியம்ஸ்ரோடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை எதிர்புறம். ரெயில்வே ஜங்ஷன் மதுரை ரோடு, புத்தூர் பிஷப்ரோடு, துறையூர் டவுன் அஜந்தா தியேட்டர் எதிர்புறம், மருங் காபுரி தாலுகா துவரங்குறிச்சி கிராமம்.- தொட்டி தாலுகா காட்டுப்புத்தூர், திருச்சி மேற்கு தாலுகா எஸ்.இ.டி.சி. காம்ப்ளக்ஸ். மணப்பாறை தாலுகா வீரப் பூர் வி.பூசாரிப்பட்டி உள் ளிட்ட இடங்களில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.