மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி – பரிசோதனை முகாம்

0 178
Stalin trichy visit

திருச்சி, ஆக.22 திருச்சி மாவட்டம்,  மணப்பாறை ரோட்டரி சங்கம் சிந்துஜா மருத்துவமனை ஏ.ஜே மருத்துவமனை ஸ்ரீ குமரன் மருத்துவமனை சுகம் மருத்துவமனை ஸ்ரீ குரு மெட்ரிக் பள்ளி இன்டராக்ட் சங்கம் இணைந்து நடத்திய மாபெரும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம் சிறப்பாக நடைபெற்றது.

மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற முகாமில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  பங்கேற்று பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகள் மற்றும் ரோட்டரி நண்பர்களிடம் நிகழ்வின் நோக்கம் குறித்தும் சிறப்பான சேவையினையும் பாராட்டி வாழ்த்துகள் வழங்கி சிறப்பித்தார்கள்.

மணப்பாறை ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் Rtn.கிருஷ்ணமூர்த்தி  தலைமையில் திண்டுக்கல் ரோடு பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து நடைபெற்ற பேரணியை கருர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மணப்பாறை நகர்மன்றத் தலைவர் கீதா.மைக்கேல்ராஜ் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அமிர்தவள்ளி ராமசாமி
ஏ.ஜே மருத்துவமனை நிர்வாக இயக்குநர் Rtn.டாக்டர்.அறிவழகன் ஸ்ரீகுரு மெட்ரிக் கல்விக் குழுமங்களின் தலைவர் Rtn.மாராச்சி ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர்.

பேரணியை தொடர்ந்து மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பரிசோதனை முகாமினை ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் Rtn.PDG.டாக்டர்.ஜமீர்பாஷா துவக்கி வைத்து மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார்.

சிந்துஜா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் Rtn.டாக்டர்.கலையரசன் சுகம் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் Rtn.டாக்டர்.சுரேஷ் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முகாமில் மண்டல ஒருங்கிணைப்பாளர் Rtn.முகமது ஹனிபா துணை ஆளுநர் Rtn.சோபனா ஆனந்த் மணப்பாறை ரோட்டரி சங்க தலைவர் Rtn.சரவணக்குமார் முன்னாள் தலைவர்கள் உறுப்பினர்கள். மணவை குயின்ஸ் ரோட்டரி சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பேரணியில் சிந்துஜா மருத்துவமனை செவிலியர் பயிற்சி பள்ளி, காவேரி பாராமெடிக்கல், கல்லூரி சூர்யா பாராமெடிக்கல் மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் சூர்யா குதிரை பயிற்சி மைய குதிரை பேபி ஸ்ரீ குரு மெட்ரிக் பள்ளி இன்டராக்ட் சஙக மாணவிகள் தியாகேசர் ஆலை மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்களின் இசை முழக்கத்துடன் பேரணி. புறப்பட்டு நிறைவுற்றது.

முகாமில் 30 பெண்களுக்கு ரோட்டரி அறக்கட்டளை குளோபல் கிராண்ட் திட்டம் முலமாக திருச்சி காவேரி மருத்துவமனைக்கு வழங்கிய புற்றுநோய் கண்டறியும் கருவிகள் அடங்கிய நடமாடும் பேருந்து மூலம் பரிசோதனை செய்யப்பட்டது

Leave A Reply

Your email address will not be published.