கனிமவளக் கொள்ளையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றவர்கள் கைது

0 189
Stalin trichy visit

திருச்சி, ஆக.22 திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் முசிறி பாப்பாபட்டி மற்றும் சில பகுதிகளில் நடைபெறும் கனிம வள கொள்ளையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக சாமானிய மக்கள் கட்சியினர் அறிவித்திருந்தனர்.

நேற்று மாலை சாமானிய மக்கள் கட்சியின் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் மலர்மன்னன் தலைமையில் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன் தா.பேட்டை ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜோசப், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தென்னரசு, காட்டுப்புத்தூர் ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட 12 பேர் வந்தனர். அவர்களை முசிறி காவல் ஆய்வாளர் கதிரேசன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டம் செய்ய வந்தவர்களை கைது செய்வது தவறு என சாமானிய மக்கள் கட்சியினர் போலீசாரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக முசிறி கைகாட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.