சமயபுரம் கோவிலுக்கு சொந்தமான 1.25 ஏக்கர் நிலம் மீட்பு
திருச்சி ஆக 22 திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான 11.14 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை நேற்று இந்து அறநிலையத்துறை மீட்டனர்.
சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும், முதன்மையானதுமான ஸ்தலமாக விலங்குவது சமயபுரம் மாரியம்மன் கோயிலாகும். இந்நிலையில் முந்தைய காலங்களில் மாரியம்மன் கோயிலை சுற்றி ஏராளமான விவசாய நிலங்கள் இருந்தபோது அதன் உரிமையாளர் பலரும் அப்பகுதியில் நிலங்களை சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமாக எழுதியுள்ளார். இதில் ஒரு பகுதியாக சமயபுரத்தில் உள்ள திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அருகிலுள்ள சமயபுரம் கோயிலுக்கு சொந்தமான 11.14 ஏக்கர் இருந்துள்ளது. அந்த 11.14 ஏக்கரில் 1.25 ஏக்கர் நிலம் ச.கண்ணனூர் பேரூராட்சி நிர்வாகம் குப்பை கிடங்காக பயன்படுத்தி வந்ததுள்ளனர்.
இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலத்தை மீட்பதற்காக திருச்சி இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த இணை ஆணையர் நீதிமன்றம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான தற்போது ச.கண்ணனூர் பேரூராட்சி அனுபவத்தில் இருக்கும் 1.25 ஏக்கர் இடத்தையும் சேர்த்து 11.14 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
இதனையடுத்து திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் லட்சுமணன், சமயபுரம் கோவில் இணை ஆணையர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் அறநிலையத்துறையினர் பேரூராட்சி வசம் இருந்த கோவில் நிலத்தை கையகப்படுத்தி அறிவிப்பு பலகை வைத்தனர்.