மின்சாரம் பாய்ந்ததில் எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

0 350
Stalin trichy visit

திருச்சி, ஆக. 23 திருச்சி மாவட்டம்,  தா.பேட்டை அடுத்த கோணப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (39). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மாரியாயி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் அஞ்சலம் மேலூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் முன்புறம் உள்ள மின் கம்பத்தில் மின்விளக்கை சரி செய்வதற்காக கம்பத்தில் ஏறி மின் விளக்கை மாற்றி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் பழனிச்சாமி கீழே விழுந்து இறந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தா.பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார் இறந்துபோன பழனிச்சாமி உடலை பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.