முசிறியில் விவசாயம் செழிக்க திருவிளக்கு பூஜை

0 214
Stalin trichy visit

திருச்சி, ஆக. 23  திருச்சி மாவட்டம் முசிறிசாலியர் தெருவில்மாணிக்க விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த விநாயகர் கோவிலில் உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

முசிறி மாணிக்க விநாயகர் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.முன்னதாக விநாயகப் பெருமானுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர். அப்போது மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கவும், தொழில் வளம் பெருகவும்,மக்கள் நோய் நொடிகள்இல்லாமல் வாழவும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.
திருவிளக்கு பூஜையில் விநாயகர் துதி, போற்றி உள்ளிட்ட பல்வேறு தமிழ் வேத மந்திரங்கள் முழங்க வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு அருட் பிரசாதம் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.