ஓடும் காரின் டயர் வெடித்ததில் தீ விபத்து
திருச்சி, ஆக. 23 திருவண்ணாமலை மாவட்டம், கொலமஞ்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலசந்திரன் தனது குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இன்று காலை திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி மோரணி மணி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் இடது பக்க டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. மேலும் கார் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்ததால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் காரில் இருந்தவர்கள் லேசான காயங்களுடன் வெளியில் தப்பினர். பின்னர் சம்பவம் பற்றிய தகவல் இருந்தா துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த காரை போராடி தீயை அணைத்தனர். பின்னர் லேசான காயமடைந்தவர்கள் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக துவரங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.