துறையூர் அருகே பாலத்துக்கு அடியில் ஆண் சடலம்

0 190
Stalin trichy visit

திருச்சி, ஆக.23 திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிறுநத்தம் கிராமத்தின் பாலத்திற்கு அடியில் உயிரிழந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று இருப்பதாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் ஆண் சடலத்தை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உயிரிழந்த நபர் கொப்பம்பட்டியை சேர்ந்த செந்தில் என்பது அவர் உப்பிலியபுரத்தில் எலக்ட்ரிக் கடை நடத்தி வருவதும் தெரிய வந்தது.
உயிரிழந்த செந்திலின் கழுத்தில் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது சடலத்தின் அருகே பூச்சி மருந்து டப்பா ஒன்று இருந்ததாகவும் கூறப்படுகிறது. மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு தற்கொலை நாடகத்திற்காக அவரது உடலின் அருகே பூச்சி மருந்து டப்பா வைக்கப்பட்டதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.