புலம் பெயர்ந்த தொழிலாளி மரணத்திற்கு சிபிஐ-எம் தலையீட்டால் இழப்பீடு

0 285
Stalin trichy visit

புலம் பெயர்ந்த தொழிலாளி மரணத்திற்கு சிபிஐ-எம் தலையீட்டால் இழப்பீடு பெற்று தரப்பட்டது

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் III வார்டு எண் 40 மற்றும் 41 – ல் புதை வடிகால் திட்ட பணிகள் அம்ருத் தொகுப்பு 3-ன்படி எல் அண்ட் டி நிறுவனத்தால் நடைபெற்று வருகிறது. மேற்படி பணி வார்டு எண். 41-ல் திருவெறும்பூர் காமராஜர் நகர் பகுதியில் Trenchles மூலம் புதை வடிகால் மெயின் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது  நேற்று  (23.8.2024)  மதியம் 3 மணியளவில் குழாய் பதிக்கும் பணியின் போது
எல்என்டி நிறுவன பணியாளர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ராஜ்குமார் ( வயது 22) என்பவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபம் உயிரிழந்தார்.

உயிரிழந்த பணியாளரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாநகராட்சி மண்டலம் 3- அலுவலகத்தில் மாநகராட்சி செயற்பொறியாளர், உதவி ஆணையர், உதவி செயற்பொறியாளர் மற்றும் எல்என்டி நிறுவனத்தின் மேலாளர் ஆகியோர் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இதில் .  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் லெனின், ரேணுகா, திருவெறும்பூர் தாலுகா செயலாளர் மல்லிகா, காட்டூர் பகுதி செயலாளர் மணிமாறன், வாலிபர் சங்க பகுதி செயலாளர் சந்தோஷ் ,பகுதி குழு உறுப்பினர்கள் தனபால், செந்தில், நல்லையா ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் இறந்து போன ஊழியரின் உடலை விமானம் மூலம் அவரது சொந்த ஊருக்கு உடனே அனுப்பி வைப்பது. ஈமச்சடங்கு உள்ளிட்ட செலவிற்கு 1.5 லட்சம் பணம் உடனடியாக கொடுப்பது எல்என்டி நிறுவனத்தால் காப்பீட்டுத் தொகை மற்றும் குழு காப்பீட்டுத் தொகை வழங்குவது ஒரு வாரக்காலத்திற்குள் அவரது குடும்பத்திற்கு வழங்குவது என உறுதி அளிக்கப்பட்டது .

மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெற வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பணி மேற்கொள்ளப்படும் என உறுதி அளிக்கப்பட்டது எழுதுபூர்வமாக உறுதியளிக்கப்பட்டுள்ளது இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.