அதிமுக புதிய உறுப்பினர்களுக்கு உரிமை சீட்டு

0 436
Stalin trichy visit

திருச்சி, ஆக. 26 திருச்சி அதிமுக ஜங்ஷன் பகுதி கழக உறுப்பினர்களுக்கு, புதிய உறுப்பினர் உரிமை சீட்டை மாவட்ட செயலாளர் சீனிவாசன் வழங்கினார்.

அதிமுக திருச்சி மாநகர் மாவட்டம், ஜங்ஷன் பகுதி கழக செயலாளர் நாகநாதர் பாண்டி ஏற்பாட்டில், மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கப்பட்டது.

இதில் கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான ரத்தினவேல், மகளிர் அணி மாவட்ட செயலாளர் நசீமா பாரிக், கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளர் ஜோதிவாணன், மாவட்ட கழக துணை செயலாளர் பத்மநாதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கட்பிரபு, பகுதி கழக செயலாளர்கள் முஸ்தபா, கலைவாணன், சுரேஷ்குப்தா, ரோஜர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.