திருச்சி அரசு கேபிள் டிவி அலுவலகத்தில் தீ விபத்து : ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான செட்-டப் பாக்ஸ்கள் எரிந்து நாசம்
திருச்சி, நவ.4 திருச்சி அரசு கேபிள் டிவி அலுவலகத்தில் தீ விபத்து – ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான செட்-டப் பாக்ஸ்கள் எரிந்து நாசம்
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரே இயங்கி வந்த அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் பழைய அலுவலகத்தில் நேற்று (நவ.3) திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 5,000 செட்-டப் பாக்ஸ்கள் உள்ளிட்ட 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
5,000-க்கும் மேற்பட்ட செட்-டப் பாக்ஸ்கள் மற்றும் அலுவலகப் பொருட்கள் முற்றிலுமாக சேதமடைந்தன. கடும் வெப்பம் காரணமாக தீ பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது.
அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை மேலும் பரவவிடாமல் முழுமையாக அணைத்தனர். இந்த திடீர் விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.