வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன் நகை – ரூ. 1.92 லட்சம் பணம் கொள்ளை
திருச்சி, ஆக. 27 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சரளபட்டியைச் சேர்ந்த ரெங்கசாமி (வயது 60). கோழி வியாபாரியான இவர் தனது மனைவி, மகன், மருமகளுடன் பொய்கைப்பட்டியில் நடந்த நாககன்னிமார் கோவில் திருவிழாவுக்கு நேற்று இரவு சென்றுள்ளார்.
இன்று அதிகாலை ரெங்கசாமியின் இளைய மகன் குமரேசன் என்பவர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோக்கள் திறக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்துள்ளன. பீரோவில் இருந்த 6 சவரன் நகை மற்றும் ரூ.1.92 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இச்சம்பவம் குறித்து இச்சம்பவம் குறித்து புத்தாநத்தம் போலீசார் அளித்த தகவலின் பேரில் தடயவியல் துறையினர் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.