பொது இடம் ஆக்கிரமிப்பு : மாவட்ட ஆட்சியரிடம் புகார்

0 234
Stalin trichy visit

பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஏவூர் ஊராட்சி சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா கோட்டூர் ஏவூர் ஊராட்சி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள்  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாவட்டம் முசிறி தாலுக்கா கோட்டூர் ஏவூர் ஊராட்சி அண்ணா நகர் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் ஆழ்குழாய் கிணறு அமைந்துள்ளது இந்நிலையில் இந்த ஆழ்குழாய் கிணற்றை சுற்றி அப்பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவர் காம்பவுண்ட் சுவர் எழுப்பியுள்ளார். இதனால் ஆழ்குழாய் கிணறு பராமரிப்பு மற்றும் வேலைகள் செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் இதுகுறித்து அவரிடம் கேட்டபோது எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் ஊராட்சி மன்ற தலைவர் சிவஞானம் என்பவர் ஆக்கிரமிப்பு செய்த லட்சுமணனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார் எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு தரும்படி கோரி மனு அளித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.