லாரியில் 400 லிட்டர் டீசல் திருட்டு : எஸ்பியிடம் லாரி உரிமையாளர்கள் புகார்

0 162
Stalin trichy visit

டீசல் திருட்டு சம்பந்தமாக புகார் அளிக்க சென்ற டிரைவர் மீது வழக்கு பதிவு செய்வதாக போலீசார் மிரட்டல் எஸ்பியிடம் லாரி உரிமையாளர்கள் புகார்:-

திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இ வாகன் சேவை சங்கத்தின் தலைவர் கணேஷ் குமார் தலைமையில் லாரி உரிமையாளர்கள் புகார் மனு ஒன்றை அளித்தனர் அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் உள்ள டிசிடபிள்யூ கெமிக்கல் பேக்ட்ரியிலிருந்து ஆசிட் ஏற்றிக்கொண்டு கடலூர் சென்ற டேங்கர் லாரி கடந்த 6-ம் தேதி இரவு 11.30 மணி அளவில் துவரங்குறிச்சி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சாலை ஓரத்தில் டேங்கர் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் இசக்கி முத்து பாண்டியன் என்பவர் உறங்கியுள்ளார். மீண்டும் 2.30 மணி அளவில் கண்விழித்து பார்த்த போது லாரியிலிருந்து டீசல் மூடி திறந்து இருப்பதை கண்டார் மேலும் டேங்க்கை பார்த்தபோது அதிலிருந்து 280 லிட்டர் டீசல் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து 100க்கு தகவல் தெரிவித்தார்.

மேலும் அடுத்த நாள் 7ம் தேதி காலை துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார் ஆனால் காவல் நிலையத்தில் புகாரை பெறாமல் டிரைவர் இசக்கி முத்து பாண்டியனை இரண்டு நாட்களாக அலைக்கழித்தனர் மேலும் புகார் அளிக்க வந்த டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்போவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் லாரி உரிமையாளர்கள் நேரில் சென்று புகார் அளிக்க சென்றபோது அவர்களது புகாரை பெறாமல் அவர்களிடம் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது இதனால் ஈ வாகன் சேவை சங்கத்தின் லாரி உரிமையாளர்கள் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து லாரி உரிமையாளர்கள் அளித்த புகாரின் மீது துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் சி எஸ் ஆர் பதிவு செய்து டீசல் திருடர்களை கண்டுபிடிக்க போலீசாருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.