மாநகர பகுதியில் காய்ச்சல் சிறப்பு முகாம்
திருச்சி, செப்.12 திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று (செப்.12) நடைபெறும் காய்ச்சல் முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைய மாநகராட்சி ஆணையர் சரவணன் அழைப்பு விடுத்துள்ளார்.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை காலங்களில் பரவும் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல்களை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த காய்ச்சல் முகாம்கள் அந்தந்த பகுதிகளில் இருக்கும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் நடத்தப்படுகிறது.
அதன்படி இன்று காய்ச்சல் முகாம்கள் நடைபெறும் இடங்களாவன:
பீமநகர்-அண்ண நகரில் காலையும், முத்துராஜா தெருவில் மாயும், இதேபோன்று பீரங்கி குளம் – சுண்ணாம்புக்காரத் தெரு, பெரிய செட்டித் தெரு, இ.பி.ரோடு- பெரியார் நகர், வரகனேரி, எ.புதுர்-கே.கே நகர், அரசு காலனி, காந்திபுரம்-தில்லை நகர் 2வது கிராஸ், அண்ணாமலை நகர், இருதயபுரம்-சங்கிலி யாண்டபுரம் வள்ளுவர் நகர் சத்துணவு மையம், சங்கிலியாண்டபுரம் சத்துணவு மையம், காமராஜ் நகர்-ராஜாராம் சாலை, தங்கையா நகர், காட்டூர்- ஜெகநாதபுரம், ஸ்டாலின் நகர், மேலகல்கண்டார் கோட்டை-புது அய்யனார் தெரு, முகாம்பிகை நகர், பெரிய மிளகுபாறை- புதுத்தெரு கருமண்டபம், கோனார்தோப்பு, ராமலிங்க நகர்-சாந்த ஷீலா நகர், ஆதி நகர், ஸ்ரீரங்கம்- ஜான்சி நகர், ரெங்கா நகர், சுப்ரமணியபுரம்-டேவிட் காலனி, கோகுலம் காலனி, தெப்பகுளம்-வானப்பட்டறை, பட்டர்வொர்த் ரோடு, ஆழ்வார் தோப்பு முதலாவது தெரு, ஆழ்வார் தோப்பு 2வது தெரு, திருவெறும்பூர்-நேதாஜி நகர், ராகவேந்திரா நகர், திருவாணைக்கோவில்- அருணா நகர், சந்திரா நகர், மற்றும் உறையூர்-ஆர் எஸ்புரம், நோவா காலனி ஆகிய இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடைபெறவுள்ளன. இவற்றில் பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு தங்கள் உடல்நிலையை பரிசோதித்து பயனடையலாம் என மாநகராட்சி ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார்.