விவசாயிகளுக்கு வேளாண் செயலிகள் குறித்து செயல்முறை விளக்கம்
திருச்சி, செப். 12 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண் செயலிகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்த பல்கலைக்கழக இளங்கலை வேளாண் இறுதியாண்டு மாணவிகள்.
திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைகழகத்தைச் சேர்ந்த இளங்கலை வேளாண்மை இறுதி ஆண்டு மாணவிகள் விசாலினி, விக்னேஷ்வரி,அபிநயா, கயல்விழி, ரேணுகாதேவி ஆகியோர் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் மண்ணச்சநல்லூர் வட்டார பகுதிகளில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு விவசாயம் மற்றும் விழிப்புணர்வு சார்ந்த நிகழ்ச்சிகளை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வேளாண் செயலிகள் குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டினர். உழவன் செயலி மற்றும் NPSS செயலி விவசாயம் சமந்தமான கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் செயல்படுகிறது. உழவன் செயலி மூலம் மானியங்கள், வானிலை தகவல் , பயிர் காப்பீடு, சந்தை விலை, வேளாண் செய்திகள் மற்றும் விவசாயம் சம்பந்தமான தகவல்களை அறிந்து கொள்ள முடியும். NPSS செயலி மூலம் பூச்சி மற்றும் நோய் தாக்குதலைக் கண்டறிய மற்றும் அதற்கான மேலாண்மை தகவலை அறிந்து கொள்ள உதவுகிறது. இவ்வகையான செயலிகள் விவசாயிகளுக்கு பெரிய உதவியாக இருக்கின்றன என மாணவிகள் செயல் விளக்கம் அளித்தனர்.