தெற்கு புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள்
திருச்சி, செப். 13 பேரறிஞர் அண்ணா 116-வது பிறந்த நாள் விழா மற்றும் அண்ணா தொழிற்சங்க பேரவையின் 50.ம் ஆண்டு தொடக்க விழாவினை கொண்டாடி சிறப்பிக்கும் வகையில் வருகின்ற 15.9.2024, ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில், திருவெறும்பூர் BHEL வாசலில் உள்ள புரட்சித்தலைவர் திருவுருவ சிலை அமைந்துள்ள பகுதியில். பேரறிஞர் பெருந்தகை திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட உள்ளது.
அதனை தொடர்ந்து அண்ணா தொழிற்சங்க 50.ம் ஆண்டு தொடக்க விழா.வை ஒட்டி ATP அலுவலகத்தில் கழக கொடியேற்றி அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் தலைமையில் நடைபெறவுள்ள மேற்கண்ட நிகழ்ச்சிகளில் மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.