பால்வேன்கள் மோதல் : ஓட்டுநர் உயிரிழப்பு
திருச்சி, செப்.14 திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மேட்டுக்கடை அருகே உள்ள ஆவின் பாலகத்திற்கு பால் ஏற்றிக் கொண்டு சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதே போல் எதிர் திசையிலும் மற்றொரு பால் வேன் வந்து கொண்டிருந்தது. இரண்டு வேன்களும் மணப்பட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென ஒரு இருசக்கர வாகனம் குறுக்கே வரவே இரண்டு வேன்களும் நிலை தடுமாறி நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் ஒ ரு பால் வேன் டிரைவர் மணப்பாறை அருகே பன்னாங்கொம்பு மேற்கு களத்தைச் சேர்ந்த ஜெகநாதன் (44) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு வேன் டிரைவர் யாகபுரத்தைச் சேர்ந்த பாண்டி (20) உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்