மின்வாரிய தொழிற்சங்க கூட்டு குழுவினர் ஆர்ப்பாட்டம்

0 180
Stalin trichy visit

 

திருச்சி,செப்,24, அரசியல் அமைப்பு சட்டம் வழங்கிய சங்கம் சேரும் உரிமையை உறுதிபடுத்த வேண்டும். பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் சட்டவிரோத, ஜனநாயக விரோத நடவடிக்கையை கைவிட வேண்டும். போராட்டத்தை ஒடுக்க காவல்துறையை ஏவுவதை கைவிட வேண்டும். சாம்சங் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராடும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும், குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் . ஒன்றிய அரசு. திருத்திய தொழிலாளர் நல சட்ட தொகுப்பை. சட்டமாக நிறைவேற்றிய நாளை கருப்பு நாளாக கடைபிடித்து
தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில்
செவ்வாய் அன்று தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்
கருப்பு கொடியேந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச திட்ட தலைவர்இளங்கோ தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தை விலக்கி தொமுச திட்ட செயலாளர் தியாகராஜன் சிஐடியு திட்ட தலைவர் நடராஜன் திட்ட செயலாளர் பழனியாண்டி,ஐக்கிய சங்க செயலாளர் ஞானம் எம்ப்ளாயிஸ் ஃபெடரேஷன் செயலாளர் சிவ செல்வம் சிஐடியு திட்ட பொருளாளர் இருதயராஜ் ஆகியோர் பேசினர் முடிவில் சிஐடியு திட்ட துணைத் தலைவர் எஸ் கே செல்வராஜ் நன்றி கூறினார்.இதில் அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.