அதிகரிக்கும் வெப்பம் : திருச்சி அரசு மருத்துவமனையில் ஏ.சி வசதியுடன் சிறப்பு வார்டு

0 14
Stalin trichy visit

திருச்சி, ஏப். 30 திருச்சியில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில், வெப்பத் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு மருத்துவமனையில் குளிர்சாதன வசதியுடன் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் குமரவேல் கூறியதாவது:. கடும் வெயிலை எதிர்கொள்ளும் வகையில், முன்னெச்சரிக்கையாக திருச்சி அரசு மருத்துவமனையில் 14 படுக்கைகளுடன் வெப்ப அலை சிறப்பு சிகிச்சைப் பிரிவு திறக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள இந்தப் பிரிவில் 2 படுக்கைகள் சிறப்பு நிலை என்ற வகையில் தயார்படுத்தப்பட்டுள்ளது. 4 படுக்கைகள் தீவிர சிகிச்சை நிலை என்ற வகையிலும், 8 படுக்கைகள் வழக்கமான சிகிச்சை நிலை என்ற வகையிலும் தயார்படுத்தப்பட்டுள்ளன. குளிர்சாதன வசதியு டன் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த வார்டில் பிரிட்ஜ், ஆக்சிஜன் வசதியுடன், வெப்பத்தாக்குதலை எதிர்கொள் ளும் அனைத்து வசதிகளும் இடம் பெற்றுள்ளன. சிறப்பு சிகிச்சைப் இதுவரை பிரிவில் யாரும் அனுமதிக்கப்பட வில்லை.

அதிக வியர்வை காரணமாக உடலில் தேவையான உப்பு குறைந்து சோர்வு ஏற்படும். எனவே, சாதாரண குடிநீருக்குப் பதிலாக அவ்வப்போது ஓஆர்எஸ் எனப்படும் உப்பு சர்க்கரை கரைசலை நீரில் கலந்து உட்கொள்வது நல்லது. அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்களுக்காக ஓஆர்எஸ் கரை சல் வைக்கப்பட்டுள்ளது.
உடல் சூடு காரணமாக உடல் நலக் குறைவு ஏற்படுவதைத் தவிர்க்க துரித உணவுகள், அதிக காரம் உள்ள உண வுகளைச் சாப்பிடுவது, இறுக்கமான ஆடைகள் அணிவது, வெயிலில் நீண்டநேரம் சுற்றுவது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

மேலும், தளர்வான முழுக்கை ஆடைகள், பருத்திநூல் ஆடைகள் அணிய வேண்டும். நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். உணவில் நார்ச்சத்து, புரதச்சத்து நிறைந்த காய், கீரை, பயறு வகைகள், பழங்களை அதிகம் சாப்பிட வேண் டும். மோர், பதநீர், இளநீர், நுங்கு, தர்ப்பூசணி, வெள்ளரிக்காய், வெள்ளரிப்பழம், எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.