சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து : ஒருவர் உயிரிழப்பு

0 414
Stalin trichy visit

திருச்சி, செப். 30  திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கிழக்குவாடி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு இரண்டு பேர் படுகாயம்.

சென்னை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் இவர் தனது உறவினர் குமார் என்பவருடம் காரில் நாமக்கல்லில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். காரை சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.கார் இன்று மதியம் 12:30 மணி அளவில் துறையூர் அருகே உள்ள கிழக்கு வாடி பகுதியில் வந்து கொண்டிருந்த பொழுது ஓட்டுனர் சூர்யாவின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த வெங்கடேசன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் குமார் ஓட்டுனர் சூர்யா ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் காயம் அடைந்தவர்களை துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் விபத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.