கோ.ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனையை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
திருச்சி, அக்.1 திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கோ.ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளிக்கான முதல் விற்பனையை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர்கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப்குமார் , மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்ஸ்டாலின் குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, மாவட்ட நகர் ஊரமைப்புக் குழு உறுப்பினர் வைரமணி, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள்,
உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.